மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

சட்டமன்றம் நேரலையில் ஒளிபரப்பப்படுமா?: சபாநாயகர்

சட்டமன்றம்  நேரலையில் ஒளிபரப்பப்படுமா?: சபாநாயகர்

வரும் 21ஆம் தேதி 16ஆவது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவு இன்று (ஜூன் 18) ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

திமுக அரசு பதவியேற்ற பின்னர், தமிழகத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதில் நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடர் என்பதால் , இன்று(ஜூன் 18) காலை சபாநாயகர் அப்பாவு ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மரபுப்படி சட்டமன்ற கூட்டத்தொடருக்கு ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தோம். விருப்பு வெறுப்பு இன்றி ஜனநாயக முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்படும். கிராமப்புறங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டுமின்றி, அரசு திட்டங்களைச் சட்டமன்ற உறுப்பினர்களே நடைமுறைப் படுத்துகின்றனர். ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா நிவாரண நிதியான ரூ.2000த்தை கொடுத்தார்கள். அந்த அளவிற்கு ஜனநாயக முறைப்படி இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றமும் அதே போன்று நடக்கும். வரும் 22ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூடி ஆலோசித்து, எத்தனை நாள் கூட்டம் நடக்கும் என்பதை அறிவிப்போம்” என்றார்.

அப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நேரடியாக ஒளிபரப்பப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு,”இது பரிசீலனையில் இருக்கிறது. நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்றும் தெரிவித்தார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 18 ஜுன் 2021