மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

முயல் வேகத்தில் ஆட்சி நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு!

முயல் வேகத்தில் ஆட்சி நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு!

கோயில் நகை மற்றும் ஆபரணங்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாது என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று(ஜூன் 18) ஆய்வு மேற்கொண்டார். கோயில் யானை பார்வதிக்கு தாய்லாந்து கண் மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தாண்டு நடைபெற உள்ள குடமுழுக்கு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு(24) கடந்த ஆண்டே கண்ணில் குறைபாடு இருந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் வருவதில் தாமதம் ஆனதால், யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த ஆட்சியிலே தொடர்ந்து கோரிக்கை வைத்தபோதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யானைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை மீண்டும் தேனியில் இருந்து மதுரைக்கு பணி மாறுதல் செய்ய உள்ளோம். யானைக்கு சிகிச்சை அளிக்க வெளி நாடுகளில் இருந்து கூட மருத்துவர்களை அழைத்து வர இருக்கிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையதளத்தில் வெளியிட்டதுபோன்று, பாதுகாப்பை கருத்தில் கொண்டு நகை விவரங்களை வெளியிட முடியாது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலை எப்பொழுது வருகிறதோ, அப்போதுதான் கோயில்கள் திறக்கப்படும். பூஜைகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. மக்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சி ஆமை வேகத்தில் நடந்தது; தற்போது நடக்கும் ஆட்சி முயல் வேகத்தில் நடக்கும். மேலும் தீ விபத்தால் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும். இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஒரு அங்குலம் நிலத்தை ஆக்கிரமித்தால் கூட போர்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 18 ஜுன் 2021