மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

ஸ்டாலின் சந்திப்பு: மோடி என்ன நினைக்கிறார்?

ஸ்டாலின் சந்திப்பு: மோடி என்ன நினைக்கிறார்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 17) டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள் அடங்கிய 25 அம்சங்கள் கொண்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார். இதன் பின் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், 'பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியும், மன நிறைவும் அளித்தது' என்று குறிப்பிட்டார்.

சந்திப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தாலும், ஸ்டாலினுடனான சந்திப்பு பற்றி மோடி என்ன கருதுகிறார் என்ற எதிர்பார்ப்பு டெல்லி மீடியாக்கள் தரப்பிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மீடியாக்கள் தரப்பில் இருந்தது.

மோடி தனது தனிப்பட்ட ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுடனான சந்திப்பு பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அதேநேரம் இந்திய பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் என்று மட்டும் பதிவிடப்பட்டு ஸ்டாலினுடனான சந்திப்பு பற்றிய இரு படங்கள் பகிரப்பட்டுள்ளன.

பிரதமருடனான சந்திப்பு பற்றி நேற்று தமிழ்நாடு இல்லத்தில் தன்னோடு டெல்லி வந்துள்ள துரைமுருகன்,டி.ஆர்.பாலு உள்ளிட்டோரிடம் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின்.

இன்று (ஜூன் 18) டெல்லியில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன் சோனியா காந்தி, சில கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வெள்ளி 18 ஜுன் 2021