மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பதவியேற்ற மு.க.ஸ்டாலின், முதல் முறையாக நாளை (ஜுன் 17) டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்.

நாளை (ஜூன் 17) காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 10 மணிக்கு டெல்லி சென்றடைகிறார். நாளை மாலை 5 மணிக்குதான் அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாளை இரவு டெல்லியில் தங்கிவிட்டு நாளை மறுநாள் ஜூன் 18 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

நாளை பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் முதல்வரின் பயணத்திட்டத்தில் அமித் ஷாவுடனான சந்திப்பு இன்று வரை இடம்பெறவில்லை என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

“தமிழ்நாடு என்ற மாநிலத்தின் முதலமைச்சராக பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்திக்கிறார். இது அரசு பூர்வமான சந்திப்பு. அதேநேரம் அமித் ஷாவையும் சந்தித்துப் பேச ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் புதன் கிழமை வரை அதற்கான சிக்னல் அமித் ஷா தரப்பில் இருந்து கிடைக்கப்பெற வில்லை. பிரதமர் மோடிக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, ‘கோ பேக் மோடி’என்ற முழக்கத்தை முன்னெடுத்து எதிர்ப்பைத் தீவிரமாக வெளிக்காட்டிய கட்சி திமுக. மற்றும் பல விஷயங்களில் பாஜகவோடு கருத்து வேறுபாடு,கொள்கை வேறுபாடு கொண்ட கட்சி திமுக. பிரதமரையே ஒரு மாநிலத்தில் நுழையவிடமாட்டோம் என்று போராட்டம் நடத்திய திமுக மீது அமித் ஷாவுக்கு நிறைய கோபம் இருக்கிறது. அந்த கோபத்தில் முதல் கட்டமாக ஸ்டாலினை சந்திக்க அப்பாயின்மென்ட் தரப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அரசு ரீதியாக மத்திய உள்துறை அமைச்சரை மாநில முதலமைச்சர் சந்திக்க முடியும். அந்த வழியில் முயற்சிகள் தொடர்கின்றன” என்கிறார்கள்.

பிரதமர் மோடி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ...

8 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர்  மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

புதன் 16 ஜுன் 2021