மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

பள்ளி மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அதன் பின் அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார்.

டெல்லி காசியாபாத் பகுதியில் இன்று (ஜூன் 16) கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மீது சென்னை மாமல்லபுரம் மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு தப்பிச் சென்ற சிவசங்கர் பாபா அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்துள்ளார். இதையறிந்து தமிழக சிபிசிஐடி டீம் அங்கே சென்றதும், தன் அடையாளத்தை மறைப்பதற்காக மொட்டையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

ஆனாலும் டெல்லி போலீஸ் உதவியோடு இன்று காலை சிவசங்கரை கைது செய்த தமிழக போலீஸ், சட்டப்படி செயல்படுவதற்காக இன்று பகலில் தெற்கு டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் சிவசங்கரை ஆஜர்படுத்தியது.

அவர் மீது சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் கூறிய பாலிய புகார்கள், அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை, போக்சோ வழக்குப் பதிவு ஆகியவை குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக போலீஸ், ‘சிவசங்கர் பாபாவை நீதிமன்றக் காவலில் வைத்து தமிழகத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வழக்கு நடத்த வேண்டும்’என்று கோரிக்கை வைத்தது. இதற்கு நீதித்துறையில் ‘டிரான்ஸிட் ரிமாண்ட்’ என்று பெயர். இதற்கு அனுமதியளித்த டெல்லி நீதிமன்றம் சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அடுத்தடுத்த உத்தரவுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.

இதேநேரம் கேளம்பாக்கத்திலுள்ள சிவசங்கர் பாபாவின் பள்ளி வளாகத்திலுள்ள அவரது ஆசிரமத்தில் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 16 ஜுன் 2021