மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு குழு எதற்கு? : ஓபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு குழு எதற்கு? : ஓபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு குழு அமைத்திருப்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்தது. இக்குழு நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர். மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இக்குழு கடந்த ஜூன் 14ஆம் தேதி கூடி ஆலோசித்தது. இதையடுத்து வருகிற திங்கள்கிழமை(ஜூன் 21) மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை ரத்து செய்ய, முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று, தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கழித்து, அதற்கு ஒரு குழுவை நியமித்து, அந்த குழு அறிக்கை அளிக்க ஒரு மாத கால அவகாசம் அளித்திருப்பது, காலம் தாழ்த்தும் செயல்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஒரே சட்டப்பூர்வமான நடவடிக்கை, அதற்கான சட்டத்தை சட்டப்பேரவையில் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது தான். 2006 ஆம் ஆண்டிலேயே வல்லுநர் குழு இது குறித்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் குழு அமைப்பது என்பது, அரைத்த மாவையே அரைப்பது போல் ஆகும்.

‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு’ என்பது போல், நீட் தேர்வு ரத்துக்கு குழு எதற்கு? என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயக் குழு அமைத்திருப்பது தாமதப்படுத்தும் செயல்.

மேலும், பிரதமரை நேரில் சந்திக்கும்போது இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்துசெய்ய அழுத்தம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 16 ஜுன் 2021