மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு : அமைச்சர் சொன்ன தகவல்!

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு : அமைச்சர் சொன்ன தகவல்!

கட்டுமான விலை பொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் அனைத்து கட்டுமான பொருட்களின் விலை 20-30% உயர்ந்துள்ளது. பெயின்ட், எலக்ட்ரானிக் ஹார்ட்வேர் பொருட்கள் விலையும் 15-20% வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் கட்டடப்பணிகள் முடங்கிப் போகும் சூழல் உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தொழிலாளர்களின் வேலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழக அரசு உடனடியாக கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று(ஜூன் 16) தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள், கலை பண்பாட்டுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தையடுத்து தொழில் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ ஊரடங்கு காலம் என்பதால் தொழில் துறையில் தேக்கம் நிலவுகிறது. ஊரடங்கு முடிந்தபிறகு தொழில் தொடங்கப் பலரும் முன்வருவர். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்கெனவே சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. சிமெண்ட் விலையைக் குறைப்பது தொடர்பாக சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் சாமானியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விரைவில் சிமெண்ட் விலை குறையும் என நம்புகிறோம். இதைத் தொடர்ந்து கம்பி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். எல்லா வகையான கட்டுமான பொருட்கள் தயாரிப்பாளர்களுடன் கலந்து பேசி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கு நல்ல முடிவு வரும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ”கீழடியில் ஏழாம் கட்ட ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னதாக நானும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் நேரில் சென்று பார்வையிட்டோம். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழரின் தொன்மையை, தமிழரின் நாகரீக வளர்ச்சியை 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கணக்கீட்டுக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அவை குறித்த விவரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 16 ஜுன் 2021