மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

’நல்ல சேலை எடுத்துப்பேன்’ !

’நல்ல சேலை எடுத்துப்பேன்’ !

நேற்று இணையம் முழுவதையும் தன் கள்ளம் கபடமற்ற புன்னகையால் ஆக்கிரமித்த பாட்டி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித் தொகையின், இரண்டாம் தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று(ஜூன் 15) மாநிலம் முழுவதும் தொடங்கியது.

பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் பணத்தை வாங்கி கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பும் காட்சியை காணமுடிந்தது. அதுபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ கலுங்கடி பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்ற ஏழை மூதாட்டி, ரேஷன் கடையில் ரூ.2 ஆயிரம் பணமும் , 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பையும் வாங்கியுள்ளார். பணத்தையும், பொருளையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்த அந்த மூதாட்டியின் முகத்தில் தோன்றிய சந்தோஷத்துக்கும், சிரிப்புக்கும் அளவே இல்லை. கள்ளம் கபடமில்லாத, முகம் முழுக்க சிரிப்போடு இருந்த புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. நேற்று சமூகவலைதளம் முழுவதும் இந்த பாட்டியின் சிரிப்புதான் ஆக்கிரமித்து இருந்தது.

முதல்வர் ஸ்டாலினும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, “இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு” என்று குறிப்பிட்டு இருந்தார். சில அமைச்சர்களும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தனர்.

இப்படி பலரின் கவனத்தையும் ஒருசேர ஈர்க்க வைத்த புகைப்படத்தை எடுத்தவர் நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி.

வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த ஜாக்சன் அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பாட்டி , ”கட்டிக்கசேலை இல்லை……….. நல்ல சேலை எடுத்துப்பேன்…….சமைக்க சாமான் வாங்கிப்பேன்…..ஸ்டாலின் ஐயா ரொம்ப நன்றி………..பணம் இல்லாம கஷ்டப்பட்டு இருந்தேன்…..2000 ரூவா கொடுத்து இருக்கீங்க நன்றி…….எனக்கு வீடு இல்லை………..கஷ்டமாக இருக்கு…….மழை பெஞ்சா தாங்காது……….வந்து பாருங்க ஐயா…..” என்று கூறிவிட்டு தன் புன்னகை மாறாமல் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2,000 ரூபாயை அந்த பாட்டியின் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார் ஜாக்சன்.

இந்த புகைப்படம் மட்டுமில்லாமல், ஒக்கி புயல் தாக்கம், கொரோனா தொற்றால் பலியானவர்கள் எரியூட்டப்படும் காட்சிகள், கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்றவற்றையும் தான் புகைப்படங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 16 ஜுன் 2021