மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளால் பாலியல் புகார்களுக்கு ஆளான சாமியார் சிவசங்கர்பாபா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டு, இன்று (ஜூன் 16)காலை டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகியான சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் பழைய மாணவிகள் பாலியல் புகார்களை காவல்துறைக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்தால், தான் கைது செய்யப்படுவது உறுதி என்று அறிந்த சிவசங்கர் பாபா, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆனார். வேறு மாநிலம் சென்று தேட வேண்டியிருப்பதால் வழக்கு சிபிசிஐடி வசம் அவசரமாக ஒப்படைக்கப்பட்டு, சிபிசிஐடி தனிப்படை போலீஸார் உத்தராகண்ட் விரைந்தனர்.

சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையில் இந்த விசாரணை நடந்து வரும் நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் குழுவினர் டேராடூனுக்கு விரைந்தனர். இதை அறிந்த சிவசங்கர் பாபா டேராடூன் மருத்துவனையில் இருந்தும் தப்பிவிட்டார். ஜூன் 16 அதிகாலை தமிழக போலீஸ் டீம் டேராடூன் போவதற்குள் சிவசங்கர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

நித்யானந்தா போல வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தில் நேற்று (ஜூன் 15) சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. விமானம், கப்பல் மூலமாக இந்திய எல்லையை தாண்டாமல் இருப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம் சிவசங்கர் பாபா உத்தராகண்டிலிருந்து தனக்கு அதிகமான பக்தர்கள் இருக்கும் நேபாளத்துக்கு சாலை மார்க்கமாக தப்பித்துச் சென்றிருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் இருப்பதாக தமிழக சிபிசிஐடிக்கு கிடைத்த தகவலை டெல்லி போலீஸுக்கு பாஸ் செய்தது. சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையை உணர்ந்த டெல்லி போலீஸ் தமிழக போலீஸுக்கு உதவ இன்று காலை சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

அவரை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 73 வயதான சிவசங்கர் பாபா தன் உடல் நிலையை காரணம் காட்டி சிறைக்கு செல்வதைத் தவிர்க்கும் கடைசி கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

வேந்தன்

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ...

8 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர்  மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

புதன் 16 ஜுன் 2021