மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

மின்னம்பலம் செய்தி எதிரொலி: ரேஷன் கடையில் முதல்வர் ஆய்வு!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: ரேஷன் கடையில் முதல்வர் ஆய்வு!

மின்னம்பலம் செய்தி எதிரொலியாக இன்று (ஜூன் 16) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக 14 மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஜூன் 3 தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ஜூன் 15 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருட்களும், 2 ஆயிரம் ரூபாய் இரண்டாம் தவணை நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடங்கிய நாளான நேற்றே அந்த 14 பொருட்களில் விலை உயர்ந்த பொருளான உளுத்தம்பருப்பு ஆங்காங்கே வழங்கப்படவில்லை என்று மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. குறிப்பாக உளுந்தூர் பேட்டை பேரூராட்சி வார்டு எண் 1 க்கு உட்பட்ட ரேஷன் கடையில் பலருக்கும் உளுத்தம்பருப்பு வழங்கப்படவில்லை என்பதை மின்னம்பலத்தில் நேற்று மாலை 14 மளிகைப் பொருட்கள் தொகுப்பு: உளுத்தம்பருப்பைக் காணோம்என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம்.

அதில், ரேஷன் கடை ஊழியர்கள் உளுத்தம்பருப்பை எடுத்து வைத்துக்கொண்டு மீதியைதான் வழங்குவதாக மக்கள் கூறியதை குறிப்பிட்டிருந்தோம். நம் செய்தியின் தாக்கத்தால் நேற்று இரவே முதல்வர் அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோருக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று திட்டத்தைத் துவக்கி வைத்த மணிக்கண்ணன் இன்று மீண்டும் உளுந்தூர்பேட்டை ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். உளுத்தம்பருப்பு விடுபட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு இன்று உளுத்தம்பருப்பை தன் முன்னிலையிலேயே வழங்கச் செய்தார் எம்.எல்.ஏ.

இந்த நிலையில்தான் இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் திடீரென ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு மாவட்ட அமைச்சரும் அந்தந்த மாவட்ட ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் முறையாக சரியாக கொடுக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.

-ஆரா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

புதன் 16 ஜுன் 2021