மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

முன்ஜாமீன் மனு தள்ளுபடி : மாஜி அமைச்சர் விரைவில் கைதா?

முன்ஜாமீன் மனு தள்ளுபடி : மாஜி அமைச்சர் விரைவில் கைதா?

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, ஏமாற்றிவிட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுத்த அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த ஜூன் 3ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், மணிகண்டனை ஜூன் 9ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. அப்போது , மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று நடிகை சாந்தினி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது. மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் இன்று(ஜூன் 16) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறிய நீதிபதி, அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; அவரை கைது செய்வதற்கான தடையும் ஜூன் 9ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால், விரைவில் மணிகண்டன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 16 ஜுன் 2021