மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

அடுத்த வாரம் பேருந்துகள் இயக்கப்படுமா?

அடுத்த வாரம் பேருந்துகள் இயக்கப்படுமா?

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவிகிதம் மாநகர பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலிருந்து பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கிட்டதட்ட அனைத்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் உள்ளன.

தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்பதால், அடுத்த வாரம் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜூன் 21ஆம் தேதியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் கூறுகின்றனர்.

”தற்போது அத்தியாவசிய பணிகளுக்கு தேவையான பேருந்துகளை இயக்கி வருகிறோம். பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். தமிழ்நாடு அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் கூறுகையில், ”வருகிற 21ஆம் தேதி முதல் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மாநகர பேருந்துகளை 50 சதவிகிதம் இயக்குவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து அந்தந்த தொழிற்சங்கங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் சொல்லப்படுகிறது. மேலும் போக்குவரத்து ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே பணிக்குவர அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர். தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டு வருகிறோம்” என கூறினார்.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 16 ஜுன் 2021