மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

தேர்தல் நடக்காத நேரத்திலும் தேர்தல் பணி: ஆணையர்

தேர்தல் நடக்காத நேரத்திலும் தேர்தல் பணி:  ஆணையர்

தேர்தல் நடைபெறாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணிகளை ஆற்றவேண்டுமென்று புதிய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் காணொலி மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (ஜூன் 15) நடத்தியது.

சுமூகமான, செயல்திறன் மிக்க, வாக்காளர்களுக்கு நட்பான சேவைகள், வாக்காளர் பட்டியலின் சரிபார்ப்பு, தகவல் தொழில்நுட்ப செயலிகளின் ஒருங்கிணைப்பு, விரிவான வாக்காளர் தொடர்பு திட்டம், ஊடகம், தகவல் தொடர்பு உத்தி, செலவு கண்காணிப்பு, சட்ட விஷயங்கள், வாக்கு இயந்திரம் மற்றும் விவிபாட் சேமிப்பு தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சித் திறன் வளர்த்தலின் மீது இக்கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது.

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளிடையே உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "வாக்காளர் தொடர்பான சேவைகளை துரிதமாகவும், சிறப்பான முறையிலும் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான பின்னணி அமைப்புகளுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கு இத்தகைய ஆய்வு கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படுவது அவசியம். இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் முறைப்படுத்தப்பட்டு அடிக்கடி நடத்தப்படும்" என்று கூறினார்.

"வாக்களிக்க வராத வாக்காளர்களுக்கான கைபேசி செயலிகள், குற்ற செயல்கள் தடுப்பு மற்றும் தேர்தல் மற்றும் காவல் அலுவலர்களின் நியமனம் உள்ளிட்டவற்றில் தாங்கள் பின்பற்றிய சிறந்த நடைமுறைகளை விரிவுபடுத்தல், ஒருங்கிணைத்தலுக்கான வழிகள் குறித்து சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை தெரிவிக்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கேட்டுக்கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்ற தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பேசுகையில், "மனிதவளம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உள்ள குறைகளை நிரப்புதல், தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை திட்டமிடுதல், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி மற்றும் திறன் வளர்த்தலை மேம்படுத்தல் ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக தேர்தல் நடைபெறாத காலகட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 16 ஜுன் 2021