மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

தொழிற்கல்வி: மாணவர்களின் சேர்க்கையை ஆராய உத்தரவு!

தொழிற்கல்வி: மாணவர்களின் சேர்க்கையை ஆராய உத்தரவு!

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய்ந்து, பரிந்துரை செய்ய ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைவாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தற்போது, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முந்தைய மதிப்பெண்ணின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது தொடர்பாக ஆராய டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2020-2021ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல் / வேளாண்மை / கால்நடை / மீன்வளம் / சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்த நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இக்கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்ப்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை, பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தும், மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்த நிலையைச் சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரை செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாதக் காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 16 ஜுன் 2021