மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கரும், திமுக சார்பில் பழனியப்பனும் போட்டியிட்டனர். இதில், விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை விநியோகித்து முறைகேடுகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் வாக்காளர்களைக் கவர விஜயபாஸ்கர் தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததைவிட அதிகமாகச் செலவு செய்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார். எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

-பிரியா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

புதன் 16 ஜுன் 2021