மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

தங்க சங்கிலியை கொடுத்த மாணவிக்கு பணி ஆணை!

தங்க சங்கிலியை கொடுத்த மாணவிக்கு பணி ஆணை!

கொரோனா நிவாரண நிதிக்காகத் தனது 2 பவுன் தங்க சங்கிலியை கொடுத்த மாணவிக்குப் பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலம் சென்றார். அப்போது பொதுமக்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவர்களில் ஒருவராக மேட்டூரைச் சேர்ந்த சவுமியா என்ற மாணவி, தான் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கொரோனா நிவாரண நிதிக்காக, தனது கோரிக்கை மனுவுடன் கொடுத்தார்.

அந்த மனுவில், பி.இ படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும், அரசு வேலை இல்லை என்றாலும், தனியார் துறையிலாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து சேலம் மாணவி சவுமியாவுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 15) சவுமியாவின் வீட்டிற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று, அவருக்குத் தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்கான பணி ஆணையை வழங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சவுமியாவிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கை அப்பெண்ணின் குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள சவுமியாவுக்கு, சேலம் ஜேஎஸ்வி ஸ்டீல் நிறுவனத்தில் ரூ.17,000 ஊதியத்துக்கு வேலை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி பணியில் சேர பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

-பிரியா

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ...

8 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர்  மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

செவ்வாய் 15 ஜுன் 2021