மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

வேட்பாளர்களின் ஆவணங்கள் : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

வேட்பாளர்களின் ஆவணங்கள் : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

இணைய தளத்தில் பதிவேற்றப்பட்ட வேட்பாளர்களின் ஆவணங்கள் தொடர்பாகச் சென்னை  உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியானது. இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில், “தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின், வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த அவகாசம் ஜூலை 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்கு தொடர அவர்களை தங்கள் கட்சி வேட்பாளர்களாக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம். எனவே இந்த ஆவணங்களை ஜூலை 15ஆம் தேதிக்கு முன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று(ஜூன் 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில ஆவணங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்து பெறவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், எந்தெந்த ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறித்தும் எந்தெந்த ஆவணங்கள் விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 15 ஜுன் 2021