மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

இணை நோயால் இறந்த பெற்றோர்: குழந்தைகளுக்கு உதவி கிடைக்குமா?

இணை நோயால் இறந்த பெற்றோர்: குழந்தைகளுக்கு உதவி கிடைக்குமா?

கொரோனா பாதித்து, இணை நோயால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் 2000 ரூபாய் நிவாரண தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 15) காலை தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த மாத இறுதிக்குள் மொத்தமாக 8,392.76 கோடி ரூபாய் கொரோனா நிதியாக 2.9 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியாக ஐசிஎம்ஆர் விதிமுறைகளைப் பின்பற்றுகிறோம். தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்தார். அதுபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோயினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அந்த குழந்தைகளின் பட்டியலை, மாவட்ட ஆட்சியர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

நீட் தேர்வு குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்று வரை 1100 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 57 பேர் குணமடைந்துள்ளனர். கருப்பு பூஞ்சை பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சிகிச்சை அளித்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆராய்ந்து வருகிறது” என்றார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 15 ஜுன் 2021