மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

தீ விபத்துக்கான இறுதி அறிக்கையின்படி நடவடிக்கை: அமைச்சர்!

தீ விபத்துக்கான இறுதி அறிக்கையின்படி நடவடிக்கை: அமைச்சர்!

மண்டைக்காடு கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான இறுதிக்கட்ட அறிக்கை வந்ததும், அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கருவறையில் கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயில் மேற்கூரை சேதமடைந்தது.

இதையடுத்து கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் திருப்பணிகள் குறித்து அறிந்துகொள்வதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

மண்டைக்காடு கோயிலில் தேவபிரசன்னம், மற்றும் சன்னிதான மேற்கூரை சீரமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். அப்போது, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியதின்படி, தற்காலிகமாக பிளாஸ்டிக் தார்பாலினால் மேற்கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள், பக்தர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரின் வேண்டுகோளின்படி தேவ பிரசன்னம் தொடங்கியுள்ளது. இதில் கூறப்படும் கருத்துகளின் அடிப்படையில், பக்தர்களின் மனம் புண்படாதவாறு மேற்கூரை அமைக்கப்படும்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மேற்கூரை பணிக்கு ரூ.50 லட்சமும், தீயணைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்கு ரூ.35 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணத்தை அறிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு பேர் கொண்ட குழு கோயிலில் பணிபுரியும் எட்டு பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

அதில் தீ விபத்து திட்டமிட்டு யாராலும் ஏற்படுத்தவில்லை என்றும், அஜாக்கிரதை காரணமாக ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பணி மற்றும் தேவ பிரசன்னம் பணிகள் முடிந்த பின் அக்குழு இறுதி அறிக்கையினை சமர்ப்பிப்பார்கள். அதில், கோயில் பணியாளர்களின் தவறுகள் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் கோயில்களில் தீயணைப்பு கருவிகள் அமைக்கப்படும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கொள்கைப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கோயில் திருப்பணிகள் முடியும் வரை நானும் அமைச்சர் மனோதங்கராஜும் நேரில் வந்து ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

செவ்வாய் 15 ஜுன் 2021