மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

இரண்டாம் தவணை ரூ.2000, மளிகை பொருட்கள் இன்று விநியோகம்!

இரண்டாம் தவணை ரூ.2000, மளிகை பொருட்கள் இன்று விநியோகம்!

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 இன்று வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று கூறினார். இதனை இம்மாத இறுதிவரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் உத்தரவின் பேரில் கடந்த மாதம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இம்மாதம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இதற்காக கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இன்னும் ஒரு சில இடங்களில் டோக்கன்கள் கொடுக்கப்படவில்லை என பொது மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல் இரண்டாம் தவணையான ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்டத்துக்கேற்ப டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரப்படாமல் இந்த மாத இறுதி வரை வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் கடைகளுக்கு வரும் போது மாஸ்க் அணிந்து வர வேண்டும் . சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

நிவாரணம் மற்றும் மளிகைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிக்கப்படும். 14 வகை மளிகைப் பொருட்களைச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

செவ்வாய் 15 ஜுன் 2021