மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர் நீக்கம்!

சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர் நீக்கம்!

சசிகலாவுடன் பேசியதாக அதிமுகவிலிருந்து 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தார். ஆனால் சமீப நாட்களாக அவர், “கட்சியை மீட்டு கொண்டு வந்துவிடலாம், தொண்டர்களுக்காக மீண்டும் வருகிறேன்” என பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சசிகலா அதிமுகவினருடன் பேசவில்லை, அமமுகவினருடன் தான் பேசுகிறார் என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதுபோன்று ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

இந்நிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் சசிகலாவுடன் பேசிய அதிமுகவினரைக் கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் அதிமுகவிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் முன்மொழிந்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் வழிமொழிந்தனர்.

தொடர்ந்து இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “

1.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எம். ஆனந்தன்,(முன்னாள் அமைச்சர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர்)

2.ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கே. சின்னசாமி, முன்னாள் எம்.பி. (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர்)

3.வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.கே.எம்.பி வாசு (அனைத்துலக எம்ஜி ஆர். மன்ற துணைச் செயலாளர் )

4. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோமாத்தூர் ஆ.சுப்பிரமணியம்,(அனைத்துலக எம்.ஜி ஆர். மன்ற துணைச் செயலாளர்)

5.ஐ. வின்சென்ட் ராஜா(மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் )

6.பருத்தியூர் கே.எம்.கே நடராஜன், (மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர்)

7.திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வி. அருள்ஜோதி, (மாவட்டக் கழக துணைச் செயலாளர்)

8.மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டி. சுஜாதா ஹர்ஷினி, (மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்)

9.திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அம்மா எஸ். சிவா, (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்)

10.கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பில்மூர் ராபர்ட், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்)

11.தென் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி பாண்டியன்,(129 ஆவது வட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் விருகம்பாக்கம் வடக்கு பகுதி)

12.இ. ராஜேஷ்சிங், (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)

13.ஒட்டக்காரன் என்.ராஜூ, (சேப்பாக்கம் வடக்கு பகுதி மாணவர் அணித் தலைவர்)

14.என்.சதீஷ் (எ) கண்ணா (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர், 62 தெற்கு வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)

15.மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ராமச்சந்திரன், (மதுரை வடக்கு 3-ஆம் பகுதிக் கழக துணைச் செயலாளர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 14 ஜுன் 2021