மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!

முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி மற்றும் 6 காமராஜ் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளைச் சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது திமுகவைச் சேர்ந்த தற்போதைய சபாநாயகர் அப்பாவு புகார் அளித்தார்.

அதுபோன்று, கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், அந்த அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக உணவு துறை முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் அப்பாவு புகார் அளித்திருந்தார்.

இந்த இரு புகார்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களை பொதுத்துறைச் செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பி உள்ளதாகக் குற்றம்சாட்டி, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இவ்விவகாரம் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச் செயலாளர் புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் அப்பாவு சார்பில், இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள் வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

திங்கள் 14 ஜுன் 2021