மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

நீட் தேர்வினால் மாணவர்களுக்கு பாதிப்புதான்!

நீட் தேர்வினால் மாணவர்களுக்கு பாதிப்புதான்!

நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதில் பாதிப்பு உள்ளது என்பதே எங்கள் குழுவின் கருத்தாக உள்ளது என குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று(ஜூன் 14) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குழு தலைவர் ஏ.கே. ராஜன், “நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளது என்பதே குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் கருத்து. தேர்வு குறித்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன. தமிழ்வழிக் கல்வி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தரவுகளின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்வோம்.

நீட் தேர்வில் பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் பாதிப்பு என்பதைத்தான் நாங்கள் ஆய்வு செய்வோம். ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதா? இல்லையா என்பது குறித்து இறுதிகட்ட அறிக்கையில் தெளிவாக கூறுவோம்.

மாணவர்களுககு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. அடுத்த திங்கள்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளோம். அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இதில் இடைக்கால அறிக்கைகள் இல்லை; இறுதி அறிக்கை மட்டுமே சமர்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 14 ஜுன் 2021