மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும்!

கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும்!

பொதுமக்களின் நலன் கருதி கொரோனா தாக்கம் குறையும்வரை கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து இன்று டாஸ்மாக், சலூன், அழகுநிலையங்கள், தேநீர் கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. தொற்று குறையாத 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கொன்றில், “கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(ஜூன் 14) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்புக்கான புதிய விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. சீனா, பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், சர்வதேச விமான பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், , தற்போது இரண்டாவது அலை தணிந்து வரக்கூடிய சூழலில் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினர்.

கொரோனா பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் நலன் கருதி கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 14 ஜுன் 2021