மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு!

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு!

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரும் ஜூன் 21ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஜூன் 14) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவர், கொறடா, துணை கொறடா, பொருளாளர், செயலாளர் மற்றும் துணை செயலாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி துணைத்தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில் துணைத் தலைவர் பதவி, அதாவது இரண்டாம் இடத்தை ஏற்க ஓபிஎஸ் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே அதிகார மோதல் இருந்து வந்த நிலையில், துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் தான் ஏற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்காக ஓபிஎஸுடன் அவர் சமாதான பேச்சுக்களை மேற்கொண்டார்.

இந்த சூழலில் இன்று துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோன்று கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், துணை செயலாளராக ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

திங்கள் 14 ஜுன் 2021