மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

தொடங்கியது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : டென்ஷனான இபிஎஸ்!

தொடங்கியது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : டென்ஷனான இபிஎஸ்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,கொறடா ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ஜூன் 14ஆம் தேதி, மதியம் 12.00 மணிக்கு மேல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுவாக அதிமுக நிர்வாகிகள் கூட்டம், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் என்றால் ஒரு மணி நேரத்திற்கு முன்பே அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்று (ஜூன் 14) நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு மதியம் 12.00 வரையில் 25 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தலைமை கழகத்துக்கு வந்திருந்தனர்.

முதலில் எம்.எல்.ஏ ஒ.எஸ்.மணியன், அவரை தொடர்ந்து சேவூர் ராமச்சந்திரன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் தலைமை கழகத்திற்கு வந்தனர்.

12 மணியைக் கடந்தும் எம்.எல்.ஏ.க்கள் வராததை தொலைபேசி மூலம் தெரிந்துகொண்ட ஈபிஎஸ் டென்ஷனாகியுள்ளார்.

இதையடுத்து, தங்கமணி, வேலுமணி, கேபி முனுசாமி, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு கேட்க, அருகில் வந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். அடுத்த பத்து நிமிடங்களில் பல எம்எல்ஏக்கள் தலைமை கழகத்துக்கு வந்துள்ளனர்.

மதியம், 12.17 மணிக்கு ஓபிஎஸ் வருகை தரும் போது வெளியில் காத்திருந்த தொண்டர்கள் 150 பேர், ஓபிஎஸ்க்கு ஆதரவாகக் கோஷமிட்டனர். ஓபிஎஸை தொடர்ந்து இரண்டு நிமிடத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி வந்த போது கூட்டத்தின் குரல்கள் குறைவாக இருந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து 12.45 மணியளவில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் வந்துள்ளனர். இதையடுத்து தற்போது எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

வணங்காமுடி

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

திங்கள் 14 ஜுன் 2021