மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

எந்த நேரத்திலும் தளர்வுகள் வாபஸ் பெறப்படும்: முதல்வர்!

எந்த நேரத்திலும் தளர்வுகள் வாபஸ் பெறப்படும்: முதல்வர்!

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றித் தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொரோனா காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 27 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டது. எனவே இன்று முதல் டாஸ்மாக், தேநீர்,பியூட்டி பார்லர் ஆகியவை திறக்கப்பட்டன.

தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 14) வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஊரடங்கை முழுமையாகவும், முறையாகவும் பொதுமக்கள் கடைப்பிடித்ததால் தான் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றிய அனைவருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என மக்களிடம் இருந்தே கோரிக்கைகள் வந்தன.

ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக அவசியமின்றி வெளியே நடமாட வேண்டாம். கட்டுப்பாடுகளை பின்பற்றி வணிகத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேநீர், சலூன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையாகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கையாகவே சொல்கிறேன். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.

காவல்துறை கண்காணிப்பு இல்லாமல் மக்கள் கட்டுப்பாட்டுகளை பின்பற்ற வேண்டும். எனவே முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். பொது போக்குவரத்து இயங்க வேண்டும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

திங்கள் 14 ஜுன் 2021