மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

மதுக்கடை திறப்பை கொண்டாடிய மதுபிரியர்கள்!

மதுக்கடை திறப்பை கொண்டாடிய மதுபிரியர்கள்!

தமிழ்நாட்டில் 35 நாட்களுக்கு பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை மது பிரியர்கள் சூடம் ஏற்றி மலர்களை தூவி கொண்டாடியுள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறப்புக்கான காரணத்தை தமிழ்நாடு அரசு தெரிவித்தும், பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் மதுபானக் கடைகளைத் திறந்து மக்களின் உயிரோடு விளையாடுவதா? நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வராத இக்கட்டான நிலையில் மக்களின் நலனைத் துளியும் சிந்திக்காது, அவசரகதியில் மதுபானக்கடைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ”தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகும். கள்ளச்சாராயம் பெருகாது என்று நீங்கள் உத்தரவாதம் கொடுத்தால் கடையைத் திறக்கக் கூடாது என்று நான் சொல்ல தயார். முதலில் பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளை மூடுங்கள்” என கூறியுள்ளார்.

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் இன்று போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபிரியர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

டாஸ்மாக் கடை திறப்பை கொண்டாடும் விதமாக மதுரையில் ஒருவர் கடை வாசலில் மதுபாட்டிலை வைத்து சூடம் ஏற்றி கும்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிரது. கொடைக்கானலில் பெய்து வரும் சாரல் மழையும் பொருட்படுத்தாது மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 163 மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டு மதுவிற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு திருஷ்டி கழித்து, இனி தடையில்லாமல் மதுக்கடை திறந்திருக்க வேண்டும் என்றுக் கூறி மதுபிரியர்கள் சூடம் ஏற்றி கொண்டாடினார்.

நெல்லை, தென்காசி பகுதிகளில் 200 மதுக்கடைகளில் வரிசையில் நின்று மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மதுவிற்பனை நடந்து வருகிறது. இருப்பினும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் வெறிசோடி காணப்படுகின்றன.

சில இடங்களில் குறைந்த விலை மதுபானங்கள் விற்பனைக்கு வராததால் மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

திங்கள் 14 ஜுன் 2021