மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

முதல் டோஸ் போட்டவர்களுக்கு 75% எதிர்ப்பாற்றல் உள்ளது : அமைச்சர்!

முதல் டோஸ் போட்டவர்களுக்கு 75% எதிர்ப்பாற்றல் உள்ளது : அமைச்சர்!

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 75% முதல் 95% வரை எதிர்ப்பாற்றல் உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங் கொரோனா மருத்துவமனைக்கு தனியார் அறக்கட்டளை வழங்கிய 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இன்று(ஜூன் 14) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

பின்பு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “முதல்வரின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. இது மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உதவியாக உள்ளது. தமிழ்நாட்டில் 54,850 படுக்கைகள் காலியாக உள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. 3 மாவட்டங்களில் 100க்கு கீழும், 27 மாவடங்களில் 500க்கும் கீழும், 2 மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேலும் கொரோனா பாதிப்பு உள்ளது. 11 மாவட்டங்களில் தொற்றை குறைக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சமாக குறைந்துள்ளது. இறப்பின் சதவிகிதத்தை மேலும் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் வெகுவாக பாதிப்புகள் குறைந்து வருகின்றது. தமிழ்நாட்டில் தொற்றின் அலை முழுமையாக குறைந்தாலும், அடுத்த அலை குறித்த எச்சரிக்கை இருப்பதால், தொடர்ந்து முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 1493 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவினர் அறிக்கை தயாரித்து விரைவில் முதல்வரிடம் அளிப்பார்கள்.

நேற்று வரை 1 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% நோய் எதிர்ப்பு திறன் உள்ளது, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது என்று வேலூர் சிஎம்சி மருத்துவனையின் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் குறித்து மத்தியஅரசு எவ்வித முடிவெடுக்கவில்லை. முதல்வர் டெல்லி செல்லும்போது இதுகுறித்து பிரதமரிடம் பேசுவார்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 14 ஜுன் 2021