மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் செயல்படும்!

போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் செயல்படும்!

சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (ஜூன் 14) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 27 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடந்தாலும், மறுபக்கம் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நேற்று மும்முரமாக நடைபெற்றன. தமிழ்நாட்டில் கிட்டதட்ட 35 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால், மதுபிரியர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் அரசு உறுதியாக இருப்பதால், தங்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், தற்போது டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட முடிவு செய்துள்ளனர். அதனால், இன்று கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்படுகின்றன.

மதுக்கடைகள் திறக்கப்படுவது குறித்தும், அங்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் நேற்று (ஜூன் 13) மாலை ஆணையர் அலுவலகத்தில் டாஸ்மாக் நிறுவன உயரதிகாரிகளுடன் போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். இதில், டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியன், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பெரியமேடு, ஈவிஆர் சாலை, ஐஸ் அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் சங்கர் ஜிவால், “டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு வராதவர்களுக்கு மது விற்கப்படாது. மதுக்கடைகள் முன்பு தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீஸார் உதவி செய்வார்கள். கடைகள் முன்பு தடுப்பு வேலிகள் போடப்படும். கூட்டம் அதிகமாக இருந்தால் ஷாமியானா பந்தல் போட்டு அமரவைத்து, டோக்கன் முறையில், மதுபானம் விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் லிஸ்ட் பட்டியலிடப்பட்டுள்ளது, மோதலில் ஈடுபடும் 15 ரவுடிகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் கைது செய்யப்படுவார்கள்” என்ற தகவலையும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய டாஸ்மாக் மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன், “டாஸ்மாக் ஊழியர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மதுபானம் விற்பனை செய்வார்கள். தடையுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குள் சென்று மது வாங்க கட்டுப்பாடு ஏதும் இல்லை. இதை போலீஸார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில் இரண்டு கவுண்டர்கள் அமைத்து விற்பனை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

திங்கள் 14 ஜுன் 2021