மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்!

24  மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்!

தமிழ்நாட்டிலுள்ள 24 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய திட்ட இயக்குநர் மற்றும் இணை மேலாண்மை இயக்குநர் கோபால சுந்தர ராஜ், ராமநாதபுர மாவட்ட ஆட்சியராகவும்

ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும்

வேளாண் துறை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநராக இருந்த கே.வி.முரளிதரன், தேனி மாவட்ட ஆட்சியராகவும்

தமிழ்நாடு சாலைத் துறை திட்ட இயக்குநர் அருண்ராஜ், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும்

பொதுத் துறை இணைச் செயலர் (புரோட்டோகால்) ரகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும்

தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண் இயக்குநராக இருந்த ஆர்த்தி , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும்

சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(சுகாதாரம்),) ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும்

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மோகன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகவும்

சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர், ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகவும்

கோவை மாநகர ஆணையராக இருந்த குமரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட ஆட்சியராகவும்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநராக இருந்த முருகேஷ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும்

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர் அமர் குஷ்வா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும்

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஷ்ரேயா சிங், நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும்,

மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த விசாகன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும்

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்ட ஆட்சியராகவும்,

டான்ஜெட்கோ இணை மேலாண்மை இயக்குநர் வினித், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும்

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த ரமண சரஸ்வதி, அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும்,

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குநர் பிரபு சங்கர், கரூர் மாவட்ட ஆட்சியராகவும்,

சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையராக இருந்த மேகநாத ரெட்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும்,

ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் விஜய ராணி, சென்னை மாவட்ட ஆட்சியராகவும்

தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரகலா, தென்காசி மாவட்ட ஆட்சியராகவும்,

தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும்,

வணிகவரித்துறை (மாநில வரிகள்) கோயம்புத்தூர் மாவட்ட இணை ஆணையராக இருந்த காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 14 ஜுன் 2021