மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

பாமகவுக்கு இதே வாடிக்கைதான்: புகழேந்தி காட்டம்!

பாமகவுக்கு இதே வாடிக்கைதான்: புகழேந்தி காட்டம்!

ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி வைப்பது தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் மற்றவர்களை விமர்சிப்பது பாமகவின் வாடிக்கையாகிவிட்டது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்று (ஜூன் 13) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி எம்.பி. குறித்து பேசிய அவர், "சட்டமன்றத் தேர்தலில், போளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது. அங்குதான் அவர்களுக்குச் செல்வாக்கும் அதிகாரமும் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் பாமக இல்லை என்றால் அதிமுக 20 தொகுதிகளில்கூட வெற்றி பெற்றிருக்காது என்று பாமகவினர் கூறிவருவது முறையல்ல.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். ஆனால், பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் அன்புமணி இன்று எம்.பி.யாக இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாமக தோல்வியைத் தழுவி விட்டதாகச் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. பாமக கோட்டையாக இருக்கும் தொகுதிகளில் அதிமுக முழுமையாகத் தோற்று உள்ளது. எனவே எங்கள் கட்சியின் தலைவர்களை அவர்கள் குறை சொல்வதை ஏற்க முடியாது.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்பதும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவுக்கு வாடிக்கையாகிவிட்டது.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை முதலில் பாமக ஆராய வேண்டும்" என்று தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 14 ஜுன் 2021