மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!

8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!

தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று (ஜூன் 13) 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வேளாண்துறை இயக்குநராகவும்

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராகவும்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐஜி யாகவும்,

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநராகவும்

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா சமூகநலத்துறை இயக்குநராகவும்

திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலா துறை இயக்குநராகவும்

வணிகவரி துறை கூடுதல் ஆணையர் லட்சுமி பிரியா தொழில்நுட்ப கல்வி இயக்குநராகவும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டாளர் சுதன், சமக்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராகவும்

சர்வே மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் செல்வராஜ் டவுன் பஞ்சாயத்து ஆணையராகவும்,

சமக்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குனர் லதா ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகவும்

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தாதேவி தோட்டக்கலைத்துறை இயக்குநராகவும்

தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார், வேளாண் பொருள் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையராகவும்

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராகவும்

சேலம் பட்டுவளர்ப்பு இயக்குநராக இருந்த வினை, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராகவும்

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெயகாந்தன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராகவும்

தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குநர் அமுதவல்லி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநராகவும்

மின் ஆளுமை கோரிக்கை நிவாரண சிறப்பு அலுவலர் கந்தசாமி, பால் பொருள் தயாரிப்பு மற்றும் பால் வளர்ச்சித்துறை இயக்குநராகவும்,

நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராகவும்

செய்தி ஒளிபரப்புத் துறை இயக்குநராக இருந்த பாஸ்கர பாண்டியன் மாநில வளர்ச்சி கொள்கை உறுப்பினர் செயலாளராகவும்,

விடுப்பில் சென்று மீண்டும் பணியில் இணைந்துள்ள அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலாளராகவும்

வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநராகவும்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜய் ராஜ்குமார் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநராகவும்,

தேர்தல் ஆணைய இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த அஜய் யாதவ் (ஜூனியர்) எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநராகவும்

தேர்தல் ஆணைய இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ஆனந்த் தொழிற்சாலைகள் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராகவும்

உள்துறை மற்றும் கலால் வரி துறை இணை செயலாளர் மணிகண்டன் , தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக மேலாண் இயக்குநராகவும்

மதுரை திட்ட அலுவலர், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராகவும்

சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் , தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 13 ஜுன் 2021