மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

ஓபிஎஸ் முகாமில் நடப்பது இதுதான்!

ஓபிஎஸ் முகாமில் நடப்பது இதுதான்!

நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்று மதியம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில் துணைத் தலைவர் பதவியை மறுத்து வருகிறார் ஓபிஎஸ். சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி தொடங்கவுள்ளதால், அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் மற்றும் கொறடா உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை (ஜூன் 14) அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஈபிஎஸுக்கும் ,ஓபிஎஸுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்துகொள்வாரா இல்லையா என அதிமுகவுக்குள்ளேயே பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.

இதனிடையே சட்டமன்றக் கட்சித் துணை தலைவர் பதவியை ஓபிஎஸ் ஒரேயடியாக நிராகரித்துவிட்டால், அந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பெயரும் , அதே போன்று கொறடா பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம் ஆகியோரது பெயர்களும் விவாதத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கூட்டத்துக்குக் கண்டிப்பாக வரணும்” என ஓபிஎஸிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து மின்னம்பலத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ்: சமரசம் பேசும் விஜயபாஸ்கர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு சாலை மார்க்கமாக தேனியிலிருந்து சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார் ஓபிஎஸ். ஆனால் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, மாலை விமானம் மூலம் சென்னை கிளம்புவதற்கு திட்டமிட்டிருந்தார். பின்னர் அந்த பயண திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு இன்று பிற்பகல் 1 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்.

ஈபிஎஸுக்கும், ஓபிஎஸுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளால் தான் இவ்வாறு தனது பயணத்தை தள்ளி, தள்ளி போட்டார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தலைமை கழகத்துக்கு வந்த போது, ‘எடப்பாடி வாழ்க’ என அவரது ஆதரவாளர்களும், ‘ஓபிஎஸ் வாழ்க’ என அவரது ஆதரவாளர்களும் தனிதனியே கோஷம் எழுப்பினர். தற்போது, ஓபிஎஸ் வருகையையொட்டி, அவரது சார்பாக போஸ்டர் ஒட்டவும், கோஷம் எழுப்புவதற்கும் ஆட்களை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் 14ஆம் தேதி அமர்க்களமாக இருக்கும் போல தெரிகிறது.

-பிரியா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

ஞாயிறு 13 ஜுன் 2021