மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்!

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளை அளித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து, டாஸ்மாக், அழகுநிலையங்கள், சலூன் கடைகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து, டீக்கடை உள்ளிட்டவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும்போது, டீக்கடைகளை திறக்க ஏன் அனுமதி வழங்கக் கூடாது என்ற விமர்சனம் எழுந்தது. மேலும், டீக்கடைகளை திறக்க வேண்டும் என உரிமையாளர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் 11 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை முதல் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்று செல்ல வேண்டும். நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.

பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

நாளை முதல் அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 13 ஜுன் 2021