மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன் படி, இன்று(ஜூன் 13) தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதுபோன்று, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் டாஸ்மாக் கடை திறப்பு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்று பாஜக தொண்டர்கள் அவரவர் வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "புதுச்சேரியில் ஆளுங்கட்சியுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. அங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்தும் பாஜக போராட்டம் செய்ய வேண்டும். தமிழகம் மீது பாஜகவிற்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை பெற்றுத் தர வேண்டும்” என்று கூறினார்.

பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதும், டாஸ்மாக் கடைகளை திறப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் சில்லறை விற்பனைக்கு மட்டும் தான் நடைபெற வேண்டும்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. மதுபானக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த பணியாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும்.

கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 13 ஜுன் 2021