மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சமீப நாட்களாகப் பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில் ஹரி இண்டர்னேஷனல் பள்ளி மாணவிகள், அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பள்ளியின் முன்னாள் மாணவி அமிர்தா நமது மின்னம்பலம் யு ட்யூப்புக்கு பேட்டி கொடுத்தார். அதில், சிவசங்கர் பாபாவால் மாணவிகள் பாதிக்கப்பட்டது குறித்து விரிவாகப் பேசினார்.

இந்த சூழலில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சிவசங்கர் பாபா உள்ளிட்ட நிர்வாகிகளை விசாரணைக்கு அழைத்தது. ஆனால் இந்த விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அவரது சார்பாக ஜானகி என்பவர் கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆஜராகினார். அவர், “பாபா நெஞ்சுவலி காரணமாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று விசாரணையின் போது தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், உட்பட 8 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 13) சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 13 ஜுன் 2021