மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

கொரோனா மருந்து, ஆக்ஸிஜனுக்கு ஜிஎஸ்டி வரிக் குறைப்பு!

கொரோனா மருந்து, ஆக்ஸிஜனுக்கு ஜிஎஸ்டி வரிக் குறைப்பு!

கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் கொரோனா மேலாண்மை தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்திருக்கிறார் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 44 ஆவது கூட்டம் இன்று (ஜூன் 12) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்.

“ டாசிலிசுமாப், அம்ஃபோடெரிசின் பி ஆகிய மருந்துகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 5% ஜிஎஸ்டி வரியை நீக்க கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

ஹெப்பாரின் போன்று ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12%லிருந்து, 5% ஆகவும், கோவிட் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் இதர மருந்துகளுக்கு 5% ஜிஎஸ்டி வரியை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (தனிநபர் இறக்குமதி உட்பட), செயற்கை சுவாசக் கருவிகள், செயற்கை சுவாசக் கவசங்கள், மூக்கில் பொருத்தப்படும் புனல்வகைக் கருவிகள், கோவிட் பரிசோதனை உபகரணங்கள், குறிப்பிடப்பட்ட அழற்சியைக் கண்டறியும் சோதனைக் கருவிகள், பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் (தனிநபர் இறக்குமதி உட்பட) முதலியவற்றிற்கு இருந்துவந்த 12% ஜிஎஸ்டி வரியை, 5 % ஆகக் குறைக்கக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

கை சுத்திகரிப்பான், வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, ஈமச்சடங்கிற்குத் தேவைப்படும் எரிவாயு/ மின்னணு/ இதர எரியூட்டிகள் (அவற்றின் நிறுவுதல் உட்பட) போன்றவற்றிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 18% ஜிஎஸ்டி வரியை 5% ஆகக் குறைக்கவும், அவசர சிகிச்சை ஊர்திகளுக்கு இருந்துவந்த 28% வரியை 12%ஆகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது”என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜிஎஸ்டி கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், ‘கொரோனா தடுப்பு மருந்துகளுக்கும் ஆக்ஸிஜன் போன்ற இன்றியமையாத மருத்துவப் பொருட்களுக்கும் அதிக வரிவிதிப்பது மனுஷத்தனமான அரசாக இருக்கமுடியாது”என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 12 ஜுன் 2021