மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்: அமைச்சர் சேகர்பாபு

பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்: அமைச்சர் சேகர்பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போல, தற்போது விருப்பப்பட்டால் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என தெரிவித்துள்ளார் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.

அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் அறநிலையத் துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. கோயில்களில் தமிழில் அர்ச்சனை, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “விரைவில் கோயில்களைத் திறக்க முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சி அனைத்து அர்ச்சகர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக முக்கியமான 47 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகை வைக்கப்படும். அதில், தமிழில் அர்ச்சனை செய்யவுள்ள அர்ச்சகர்களின் பெயர்கள், கைபேசி எண்களும் இடம்பெறும்” என்றார்.

மேலும் அவர், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தேன், 100 நாட்களுக்குப் பிறகு பாருங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் திருக்கோயில்களில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் விருப்பப்பட்டால் அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, அர்ச்சகராக்குவதற்கு உண்டான முயற்சியை முதல்வர் அனுமதியுடன் மேற்கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, எங்களுக்கு வரும் புகாரின் தன்மையின் அடிப்படையில் கோயில் நிலங்களை மீட்டெடுக்கிறோம். மீட்டெடுத்தவுடன் அதுகுறித்து விசாரித்து அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடமும், செயலாளரிடமும் கொடுப்பதற்கு இணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையைப் பெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல்வர் ஆலோசனையின் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். சிலை திருட்டைத் தடுப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதுபோன்று பற்றாக்குறை இருக்கும் இடங்களில் அர்ச்சகர்களை, கோயில் பணியாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கோயில்களில் உள்ள யானைகளுக்குத் தேவையான மருத்துவ வசதி மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

சனி 12 ஜுன் 2021