மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் : வழிகாட்டு நெறிமுறைகள்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் : வழிகாட்டு நெறிமுறைகள்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்யப்படும், அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது அத்தொகை வட்டியுடன் வழங்கப்படும். அக்குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும். ஏதாவது ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று கடந்த மே 29ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தொடர்ந்து, கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்த 7 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு அரசு அமைத்து.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு பணிக்குழு, பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தரவுகளை பெற்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளை, மாவட்ட வாரியாக உள்ள குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு ஆஜர்ப்படுத்த வேண்டும்.

இக்குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கும்பட்சத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படும்.தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, பிரதமரின் நிதியுதவி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். சீருடை, புத்தகங்களுக்கும் இந்த நிதியில் இருந்தே வழங்கப்படும்.

குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவன ஊழியர்களாகவோ இருக்கும்பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் கிடைக்காது.

இதற்கென அமைக்கப்பட்ட குழு மேற்கண்ட பணிகளை கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 12 ஜுன் 2021