bஜூன் 16: புதுச்சேரி சபாநாயகர் தேர்தல்!

politics

6

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தேர்தல் நடந்து முடிந்து, ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இன்னும் சபாநாயகர் அறிவிக்கப்படாமல், அமைச்சர்கள் பொறுப்பு ஏற்காமல் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் , அமைச்சர் பதவி பங்கீடு ஆகியவற்றில் பாஜகவுக்கும் என்ஆர் காங்கிரசுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டது.

ஆனால் இரு கட்சியினருக்கும் இடையே சுமுக உறவு உள்ளது, முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.

இந்த சூழலில் வரும் 16ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “துணைநிலை ஆளுநர், புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரை ஜூன் மாதம் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்குக் கூட்டவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அன்றைய தேதியைச் சட்டப்பேரவையின் பேரவை தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியாக நிர்ணயித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் படி, நியமன சீட்டுகள் வரும் ஜூன் 15ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பேரவை செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *