மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பேட்டி!

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பேட்டி!

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் உள்ளது. இதற்கிடையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடாமல் வெறும் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை பற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று(ஜூன் 12) தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “ தமிழகத்திலுள்ள 51 அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

பாலிடெக்னிக் மாணவர்கள் 8 செமஸ்டர் தேர்வுகளையும் தொடர்ந்து எழுதலாம். மாணவர்கள் மீண்டும் செமஸ்டர் தேர்வை எழுத விரும்பினால், எந்த பேப்பரை எழுத விரும்புகிறார்களோ அதற்கு மட்டும் தலா 65 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதலாம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை எதன் அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதே வழிமுறைகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும்.

அண்ணாமலை, சேலம் பெரியார், மதுரை காமராஜ் பல்கலைக்கழகங்களின் முறைகேடு பற்றி விசாரிக்க முதல்வருடன் ஆலோசித்து ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்படும்.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். அண்ணா பல்கலைக்கழக விருப்பப் பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும்” என தெரிவித்தார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 12 ஜுன் 2021