மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

மதுக்கடைகள் திறக்கப்பட்டது ஏன்?

மதுக்கடைகள் திறக்கப்பட்டது ஏன்?

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததால்தான் டாஸ்மாக் கடைகளை திறக்க வருவாய்த் துறை முடிவு செய்தது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டில், வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை இன்று (ஜூன் 12) அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாடு அரசின் முயற்சியில் இதுவரை 1.06 கோடி தடுப்பூசிகள் வரபெற்றுள்ளன. இதுவரை 98 லட்சம் தடுப்பூசிகள் பயனாளர்களுக்கு போடப்பட்டுள்ளது. நேற்று மாலை 3.65 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன. இவைகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை1.26 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. மாலையும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகவும், சிறப்பாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். சென்னையில் இதுவரை 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்தமுறைபோன்று, இந்தமுறையும் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஸ்பாட்டாக மாறிவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 9,655 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இடமாக கோயம்பேடு மார்க்கெட் மாறவுள்ளது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் இதுவரை 2500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிந்தாதரிபேட்டையில் நேற்றுதான் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டாலும், 100க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதன்படி, தமிழ்நாட்டில் இன்று மாலைக்குள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டிவிடும்.

தடுப்பூசி போடும் பணி திருவிழா போல சிறப்பாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 36 ஆயிரமாக இருந்த பாதிப்பு 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விட தொற்றிலிருந்து குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா தொற்று அதிகரித்தபோது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக மதுக்கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மதுக்கடைகளை திறக்க வருவாய் துறை தற்போது முடிவு செய்துள்ளது. கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோதே மதுக்கடைகள் திறந்து இருந்தன. இதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என பேசினார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 12 ஜுன் 2021