மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

தமிழகத்தில் கொரோனாவுக்கு 32 மருத்துவர்கள் பலி!

தமிழகத்தில் கொரோனாவுக்கு 32 மருத்துவர்கள் பலி!

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியளவில் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், காவல்துறையினர் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் தொற்று பாதித்து 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக பீகாரில் 111 மருத்துவர்களும், டெல்லியில் 109 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 79 பேரும், மேற்கு வங்கத்தில் 63 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஜார்கண்ட் 39 பேரும், ஆந்திராவில் 35 பேரும், தெலங்கானாவில் 36 பேரும், குஜராத்தில் 37 பேரும், ஒடிசாவில் 28 பேரும், மகாராஷ்டிராவில் 23 பேரும், தமிழகத்தில் 32, மத்திய பிரதேசத்தில் 16, அசாம் 8, கர்நாடகாவில் 9, கேரளாவில் 24, மணிப்பூர், சத்தீஸ்கரில் தலா 5, ஹரியானா, பஞ்சாப், காஷ்மீரில் தலா 3 பேர், கோவா, திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பாண்டிச்சேரி ஒருவர் என மொத்தம் 719 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் நீடித்த கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். ஆனால் நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீடித்திருக்கும் இரண்டாம் அலையில் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ’கோவிட் தியாகிகள்’ என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களது குடும்பங்களுக்கு உரிய ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் தொற்று நோயால் ஒரு பக்கம் உயிரிழக்கின்றனர்; மறுபக்கம் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 12 ஜுன் 2021