மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

’பாரத பேரரசு’ என்று அழைப்போம் : குஷ்பு

’பாரத பேரரசு’ என்று அழைப்போம் : குஷ்பு

தமிழ்நாட்டில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால், நாம் ‘பாரத பேரரசு’ என்று அழைப்போம் என நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்களும், ஊடகங்களிலும், அறிக்கைகளிலும் ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. ஒன்றிய அரசு என்ற சொல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும், பாஜக குற்றம் சாட்டி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டால் ஐந்து ஆண்டுகளில் முடிவடைய வேண்டிய ஆட்சி ஐந்தே மாதங்களில் முடிந்துவிடும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி எச்சரித்திருந்தார்.

மக்கள் எப்போதும் அழைப்பது போல் ‘மத்திய அரசு’ என்றே அழைக்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறியிருந்தார்

இவ்வாறு ஒன்றிய அரசு என்ற விவகாரம் பல விவாதங்களையும், கட்சிகளிடையே மோதலையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டரில், “மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிற அனைவருமே,மத்திய அரசின் அதிகபட்ச நலன்களை அனுபவித்து வருபவர்கள்தான்.

தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. பல ஆண்டுகளாக எதிர்ப்பில் இருந்தபோதிலும்,மத்திய அரசு என்று அழைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். தமிழகத்தில் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என அழைத்தால்,நாங்கள் 'பாரத பேரரசு' என்று அழைப்போம். இது அவர்களுக்கு மேலும் புரிந்துகொள்ள உதவும். தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே….. வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 12 ஜுன் 2021