மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

தமிழகத்தில் ஆமை வேகத்தில் தடுப்பூசி பணி : ஓபிஎஸ்

தமிழகத்தில் ஆமை வேகத்தில் தடுப்பூசி பணி : ஓபிஎஸ்

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, செங்கல்பட்டில் தடுப்பூசி தொழிற்சாலை என தடுப்பூசி குறித்து பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் ஆமை வேகத்தில்தான் சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜூன் 7ஆம் தேதி நிலவரப்படி, இந்தியளவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 38 சதவிகிதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், திரிபுராவில் 92% இமாச்சல பிரதேசத்தில் 77%, ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், கோவா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் 50% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் 24 சதவிகிதத்தினரும், தமிழகத்தில் வெறும் 19 சதவிகிதத்தினருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சமீபத்தில் வெளியான ஒன்றிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டைவிட பின் தங்கிய மாநிலங்களான பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்களில்கூட 24 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெறும் 19 விழுக்காடு மக்கள்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகம்தான் தடுப்பூசி போடுவதில் கடைசி இடத்தில் உள்ளது.

தமிழகத்தை விட மக்கள் தொகை குறைந்த மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழகத்தில் சுணக்கம் இருப்பதாகத் தெரிய வருகிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி, தேவைப்படின் புள்ளி விவரங்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 12 ஜுன் 2021