மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படுகிறதா?: மா.சுப்பிரமணியன்

ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படுகிறதா?: மா.சுப்பிரமணியன்

கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன்நோக்கு மருத்துவமனை கட்டப்படுவதில், அரசியல் உள்நோக்கம் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றப்படும் என்று தகவல்கள் பரவின.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பன்நோக்கு மருத்துவமனைக்கு ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டிடம் மீண்டும் சட்டப்பேரவையாகவோ, அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இது மிகவும் வருத்தமளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவரது மனங்களிலும் எழுந்துள்ளது.

எனவே ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது போன்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அந்த நடவடிக்கையைத் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தேர்தல் அறிக்கையில் கூறியதை போல, தென் சென்னையில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்துவதற்கு, 4 ஏக்கர் கூடுதல் பரப்பளவில், கூடுதல் கட்டடங்களைக் கட்டி, பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 250 கோடி ரூபாய் செலவில் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில், புதிய பன்நோக்கு மருத்துவமனை உருவாகிறது. அதில், அரசியல் உள்நோக்கம் இல்லை. புதிதாக மருத்துவமனை மட்டுமே கட்டப்படுகிறது” என்று தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.. அப்போது, மருத்துவமனையின் வசதிகளைப் பார்வையிட்ட அவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில், சிறிது நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 11 ஜுன் 2021