மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

இனி லைசென்ஸ் வாங்க எட்டு போட வேண்டாம்!

இனி லைசென்ஸ் வாங்க எட்டு போட வேண்டாம்!

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சி முடித்தாலே ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் எல்எல்ஆர் பதிவு செய்து விட்டு, ஓட்டுநர் பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி பெற வேண்டும். பின்பு, உரிமம் வாங்குவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இறுதியாக ஆர்டிஓ அதிகாரி முன்பு வாகனத்தில் எட்டு போட்டு காட்ட வேண்டும். இதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

இந்நிலையில், தற்போதுள்ள விதிமுறைகளை மாற்றி, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க, ஒன்றிய அரசுக்கு மோட்டார் வாகன திருத்தம் சட்டம் 2019 அதிகாரம் அளிக்கிறது.

இதுகுறித்து ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. அதன்படி, அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் ஆர்டிஓ அலுவலகம் வந்து வாகனங்களை ஓட்டி காட்டத் தேவையில்லை. இந்த நடைமுறையின் மூலம் பயிற்சிமையங்களில் பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதை உறுதி செய்ய முடியும்.

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் ஒருசில வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். பயிற்சியாளர்களுக்கு தரம்வாய்ந்த பயிற்சி கொடுப்பதற்காக சிமுலேட்டர்’-வாகனம் போன்ற வடிவமைப்பு, டிரைவிங் பழகுவதற்கான பிரத்யேக சோதனை பாதை ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

மோட்டார் வாகன சட்டம், 1988-ன் கீழ் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் புத்தாக்க படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும்.

பயிற்சி மையங்கள் தொழில்ரீதியான சிறப்பு பயிற்சியை அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

சாலைபோக்குவரத்து துறையில், திறமையான ஓட்டுநர்களின் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக உள்ளது. சாலை விதிமுறைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமையால் சாலை விபத்துக்கள் அதிகளவில் நிகழ்கின்றன. இந்த நடவடிக்கை மூலம் போக்குவரத்து துறையில் நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை பெற உதவும். இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு சாலை விபத்துகளையும் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

வெள்ளி 11 ஜுன் 2021