மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்!

வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்!

சென்னை சேத்துப்பட்டில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

கடந்த வாரம் சேத்துப்பட்டு சிக்னலில் வாகனச் சோதனையின்போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜா ராஜன் ஒருகட்டத்தில் காவலர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து, அவர் மீது ஆறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேரில் ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

எப்போது வேண்டுமானாலும் வழக்கறிஞர் தனுஜா கைது செய்யப்படலாம் என்ற நிலையில், சென்னை காவல்துறை பார் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.

அதில், வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் பயிற்சி வழக்கறிஞரான ப்ரீத்தி ஆகிய இருவரின் விவரங்களையும் குறிப்பிட்டு, இதுபோன்ற செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. காவலர்கள் தங்கள் கடமையை செய்வதற்கு வழக்கறிஞர்கள் உதவியாக இருக்க வேண்டுமே தவிர இடையூறாக இருக்கக் கூடாது.

அதனால், வழக்கறிஞர் தனுஜா மீது பார் கவுன்சில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வெள்ளி 11 ஜுன் 2021