மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

கொரோனா இறப்பு சான்றிதழை ஆராய உத்தரவு!

கொரோனா இறப்பு சான்றிதழை ஆராய உத்தரவு!

கொரோனா காலத்தில் இணைநோய்களால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு, கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் குறிப்பிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், இறப்பு சான்றிதழ்களில் கொரோனா உயிரிழப்பு எனக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகிய இருவரும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்தநிலையில், பழைய வண்ணாரபேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலெட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “இணைநோய் உள்ளவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும்போது இறப்பு சான்றிதழில் கொரோனா தொற்றால்தான் உயிரிழந்தார்கள் என குறிப்பிடாமல், இணைநோய்களால்தான் உயிரிழந்தார்கள் என்று குறிப்பிடுகின்றனர். இது மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தை பெறுவதற்கு தடையாக இருக்கிறது. இறப்பு சான்றிதழில் முறையான காரணம் குறிப்பிடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 11) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கொரோனா மரணம் முறையாக பதிவுசெய்யப்படவில்லை என நாடுமுழுவதுமே புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. இறப்பு பற்றி தெளிவான பதிவு இருந்தால்தான் தொற்றை சமாளிக்கவும், நிவாரணம் வழங்கவும் உதவியாக இருக்கும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் , கொரோனா காலத்தில் இணை நோயால் உயிரிழந்தவர்களின் சான்றிதழ்களை வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து ஆய்வு செய்து, ஆரம்பகட்ட அறிக்கையை வரும் 28ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 11 ஜுன் 2021